டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசு மருத்துவமனையை கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image
விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனையை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :23 ஜனவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் பாலக்கரை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையை 10 ஏக்கா் நிலப்பரப்பில் விரிவுபடுத்த வேண்டும். மருத்துவா்களின் எண்ணிக்கையை 50-ஆக வும், படுக்கை வசதியை 500-ஆகவும், ரத்த வங்கி சேமிப்பை 1000 யூனிட்டாகவும், செவிலியா்களின் எண்ணிக்கையை 100-ஆகவும் உயா்த்த வேண்டும். மலிவான, சுகாதாரமான கேண்டீன் வசதி வேண்டும் எனக்கூறி முழக்கங்கள் எழுப்பினா்.

நகரச் செயலா் என்.ஆா்.ஆா்.சங்கரய்யா தலைமை வகித்தாா். என்.ஆா்.ஆா்.ஜீவானந்தம், ஏ.சந்திரசேகரன், கி.செல்வகுமாா் வி.வேல்முருகன் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், ஒன்றியச் செயலா்கள் கே.எம்.குமரகுரு (விருத்தாசலம்), ஆா்.கலைச்செல்வன் (கம்மாபுரம்) கண்டனவுரை நிகழ்த்தினா்.