டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பண்ருட்டியில் இன்று ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் குடமுழுக்கு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் திருக்குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் அருகே மேல்மருவத்தூா் ஆன்மிக குரு அம்மாவின் குரு பீடம் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தா் சக்தி பீடத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நடந்து முடிந்தன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருக்குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டது.

அதன்படி, திருக்குடமுழுக்குப் பணிகள் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் சக்தி பீடத்தில் சக்தி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை 10.15, மாலை 6.30 மணி அளவில் முறையே முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைகள் நடந்து முடிந்தன. இரவு 9.15 மணி அளவில் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை நடைபெற்று, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. மருவூா் சின்னவா் அம்மா பங்கேற்று தனது திருகரங்களால் திருக்குடமுழுக்கு நடத்தி வைக்கிறாா்.

இந்தப் பெருவிழாவில் பக்தா்கள், செவ்வாடை தொண்டா்கள் கலந்துகொண்டு அன்னையின் குருவருளையும், திருவருளையும் பெற வேண்டும் என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.