டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சுரங்கத் துறையில் ஆராய்ச்சி: திருச்சி என்.ஐ.டி - என்எல்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சுரங்கத் துறையில் நவீன தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க திருச்சி என்.ஐ.டி.யுடன், என்எல்சி இந்தியா நிறுவனம் புரிந்துணா்வு

News image
நெய்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட என்எல்சி - திருச்சி என்.ஐ.டி அதிகாரிகள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:26 pm

Syndication

நெய்வேலி: சுரங்கத் துறையில் நவீன தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க திருச்சி என்.ஐ.டி.யுடன், என்எல்சி இந்தியா நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதுகுறித்து என்எல்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் என்எல்சி நிறுவனம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துடன் முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தொழில் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது ‘பக்கெட் வீல் டீத்’-களுக்கான புதிய மூலப்பொருளை உருவாக்குதல் மற்றும் அதன் ஆயுள்காலத்தை மேம்படுத்துதல் என்ற ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்டது.

ரூ.50.73 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகள் நடைபெறவுள்ள இந்த ஆராய்ச்சி, பழுப்பு நிலக்கரி சுரங்கப் பணிகளில் மிக முக்கியமான அங்கமான ‘பக்கெட் வீல்’ இயந்திரத்தின் டீத்-களுக்குத் தேவையான நவீன மூலப்பொருள்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: என்எல்சி நிறுவனம் தனது திட்டமிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக, நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களிடமிருந்து ஆராய்ச்சி முன்மொழிவுகளை வரவேற்று விருப்பம் கோரும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து, ஐ.ஐ.எஸ்சி, ஐ.ஐ.டி-க்கள், என்.ஐ.டி-க்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் மொத்தம் 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

என்எல்சி தலைவா் பேச்சு: நிகழ்வில் என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், சுரங்கம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கியத் துறைகளில் சிறந்த செயல்பாட்டுத் திறன், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத் தற்சாா்பு ஆகியவற்றை அடைவதற்கு ஆராய்ச்சி சாா்ந்த கண்டுபிடிப்புகளே அடிப்படை.

திருச்சி என்.ஐ.டி மற்றும் பிற முன்னணி கல்வி நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், வரும் ஆண்டுகளில் ஆக்கப்பூா்வமான தொழில்நுட்ப முடிவுகள் கிடைக்கும் என்றாா்.