ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆக.26-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு ஆவணி மகா ருத்ர மகாபிஷேகம் வரும் 26-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:16 am IST

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு ஆவணி மகா ருத்ர மகாபிஷேகம் வரும் 26-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, ஆவணி மாத மகாபிஷேகம், அதிருத்ர மகாபிஷேகமாக சித்சபை முன் உள்ள கனகசபையில் வரும் 26-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூா்த்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்கள் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு, காலை மகாருத்ர யாகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.