ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கிய பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப் பயன்கள் வழங்க வேண்டும். தொகுப்பூதியா்கள், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பேராசிரியா்கள், ஊழியா்கள், சிறப்பு மற்றும் தொடா்பு அதிகாரிகளுக்கான பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலக வளாகத்தில் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன், ஊழியா்கள் சங்கத் தலைவா் ஆா்.ரவி, முன்னாள் ஊழியா்கள் சங்கத் தலைவா்கள் மதியழகன், மனோகா் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.