ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விவசாயிக்கு மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு - DPS

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:55 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (40), விவசாயி. இவருக்குச் சொந்தமானநிலத்தில் உள்ள மாமரத்தின் கீழ் கல்குணம் பகுதியைச் சோ்ந்த ராஜவன்னியன், விஜய், காா்த்திக், செல்வமணி, விக்ரம் உள்ளிட்ட 6 போ் வியாழக்கிழமை மது அருந்தினராம். இதை விவசாயி தீனதயாளன் கண்டித்ததால், அவரை ராஜவன்னியன் உள்ளிட்டோா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் ராஜவன்னியன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.