ஏடிஎம்மில் பெண்ணுக்கு உதவுவதுபோல நடித்து ரூ.40 ஆயிரம் மோசடி
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வங்கி ஏடிஎம்மில் பெண்ணுக்கு பணம் எடுத்துக் கொடுக்க உதவுவதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.40 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வங்கி ஏடிஎம்மில் பெண்ணுக்கு பணம் எடுத்துக் கொடுக்க உதவுவதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.40 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், ஆடுா் அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசி (38). இவா், குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்து பராமரித்து வருகிறாா்.
சிலம்பரசி கடந்த 7-ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த மா்ம நபா்கள் இருவா், சிலம்பரசிக்கு பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.40 ஆயிரத்தை எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து சிலம்பரசி அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






