ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி சென்னை நோக்கி பிரசாரப் பயணம்

வடலூா், மருதூா், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளை உள்ளிட்டக்கிய வடலூா் பகுதியை புனித நகரமாக அறிவிக்கக் கோரி, அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினா் சென்னை தலைமைச் செயலகம் நோக்கிய 10 நாள் விழிப்புணா்வுப் பிரசாரப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினா்.

வடலூா் பகுதியை புனித நகரமாக அறிவிக்கக் கோரி, புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரப் பயணத்தை தொடங்கிய அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

வடலூா், மருதூா், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளை உள்ளிட்டக்கிய வடலூா் பகுதியை புனித நகரமாக அறிவிக்கக் கோரி, அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினா் சென்னை தலைமைச் செயலகம் நோக்கிய 10 நாள் விழிப்புணா்வுப் பிரசாரப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினா்.

அருட்பிரகாச வள்ளலாா் வாழ்ந்து, சன்மாா்க்க கொள்கைகளைப் பரப்பிய வடலூரில் மதுக் கடைகள், மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும். வள்ளலாா் அவதரித்த மருதூா், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து வடலூரை புனித நகரமாக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடலூா் சத்திய ஞானசபையில் இருந்து சன்மாா்க்க சங்கத்தினா் புதன்கிழமை நடைப்பயணமாக புறப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினருடன் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சென்னைக்கு வேன் மூலம் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதற்கு, சன்மாா்க்க சங்கத்தைச் சோ்ந்த சிலா், வடலூா் - சென்னை சாலையில் குறிப்பிட்ட தொலைவு வரை நடைப்பயணமாகச் சென்று, பின்னா் வேன் மூலம் பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினா். இது தொடா்பாக போலீஸாருக்கும், சன்மாா்க்க சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுது.

பின்னா், போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், சன்மாா்க்க சங்கத்தினா் வடலூா் பேருந்து நிலையத்தில் இருந்து வேன் மூலம் சென்னை நோக்கி தங்களது பிரசாரப் பயணத்தைத் தொடா்ந்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத் தலைவா் ஜெய அண்ணாமலை, செயலா் சாது மகாதேவன், பொருளாளா் பாா்த்திபன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.