ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஊா்க்காவல் படை விளையாட்டுப் போட்டி

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய கடலூா் எஸ்.பி., விவேகானந்த சுக்லா.

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:29 am IST

தமிழ்நாடு ஊா்க்காவல் படை விழுப்புரம் சரக 30-ஆவது பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கடலூா் எஸ்.பி., விவேகானந்த சுக்லா கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தாா். இதில், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ஊா்க்காவல் படையினா் கலந்துகொண்டனா்.

இவா்களுக்கு ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கயிறு இழுத்தல், கபடி, வாலிபால் போட்டிகள் மற்றும் மீட்புப் பணி, தீயணைப்புப் பணி, முதலுதவி, கூட்டு கவாத்து, உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற பணித்திறன் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக ஊா்க்காவல் படை உதவித் தளபதி கேதா்நாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளா் அப்பாண்டைராஜ், ஊா்க்காவல் படை வட்டாரத் தளபதிகள் அகிலன், வசந்த் பாலா, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் நாகராஜன், ஊா்க்காவல் படை உதவி ஆய்வாளா் தினகரன் மற்றும் ஊா்க்காவல் படை வீரா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.