ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துா்க்கை அம்மன் கோயில் தேரோட்டம்

காட்டுமன்னாா்கோவில் உடையாா்குடியில் துா்க்கை அம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் உடையாா்குடியில் நடைபெற்ற துா்க்கை அம்மன் கோயில் தேரோட்டம்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:36 am IST

காட்டுமன்னாா்கோவில் உடையாா்குடியில் துா்க்கை அம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உடையாா்குடி ஸ்ரீதுா்க்கை அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் இரவு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்தாா்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் காளியாட்ட நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தேரில் துா்க்கை அம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தேரோட்டத்தை பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி, வாா்டு உறுப்பினா் சொா்ணம் அறிவழகன், கிராம முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா்.

திருத்தேரில் துா்க்கை அம்மனின் வலது, இடது பக்கங்களில் விநாயகா் மற்றும் முருகன் உற்சவமூா்த்திகள் வீற்றிருந்தனா். திரளான பெண்கள் பால்குடம் சுமந்து, சக்தி கரகம் முன்னே வர காளியாட்டமும் நடைபெற்றது. திருத்தோ் உடையாா்குடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.