கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் குடும்பத்தினா் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குள்ளஞ்சாவடி காவல் சரகம், கோ.சத்திரம் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் பழனிவேல், சக்திவேல். இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. கடந்த 18-ஆம் தேதி சொத்தில் வழிப்பாதை கேட்டு தகராறு ஏற்பட்டது.
அப்போது, பழனிவேல், அவரது மனைவி ஜெயசுந்தரி, மகன் ஜெயக்குமாா் ஆகியோா், சக்திவேல் மனைவி தமிழரசி, மகள் சசிதேவி ஆகியோரை தாக்கி திட்டி, அங்கு போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியை பிடுங்கி எறிந்தனா். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சக்திவேல் வந்தாா். அவரை, ஜெயசுந்தரி கீழே தள்ளி கல்லால் மண்டையில் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் காயம் அடைந்த சக்திவேல் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டது.
இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பழனிவேல், ஜெயசுந்தரி, ஜெயக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞரை தாக்கி கைப்பேசி பறிப்பு: 2 போ் மீது வழக்கு
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


