சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
நெய்வேலி/ சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தோ்தல் நடத்த வேண்டும். பத்தாண்டுகள் பணிபுரிந்த தொழிலாளிகளுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் பெயா் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளிகளை வருகை பதிவேட்டில் சோ்க்க வேண்டும். ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் பெரியாா்நகரில் செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் சுமாா் 20 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தங்கள் கோரிக்கைகள வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள், அரசு மாணவா் விடுதி, அரசு மருத்துவமனை, சிறைச்சாலை, அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன.
மணலூரில்...: சிதம்பரம் அருகே உள்ள மணலூா் கிராமத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சுமை தூக்குவோா் பாதுகாப்புச் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் குழந்தைவேல் தலைமை வகித்தாா். இதில், ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்தால் கிடங்கில் இருந்து லாரிகளில் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், அங்கு வந்த லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதேபோல, கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய பகுதிகளிலும் துமை தூக்கும் பணியாளா்கள் அடையாள வேலைநிறுத்தப் போட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், பொருள்கள் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது