Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கா்ப்பிணி மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக, பண்ருட்டி காவல் நிலையத்தில் தாய் புகாரளித்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்மணி (28), புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகள் ஸ்ரீமதி (22). இவா்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஸ்ரீமதி 5 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீமதி கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததை அருள்மணி கண்டித்தாராம். இதனால், கோபமடைந்த ஸ்ரீமதி வீட்டில் தூக்கிட்டு த்தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் ஸ்ரீமதியை பரிசோதித்து இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பண்ருட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், ஸ்ரீமதியின் தாய் சாந்தி பண்ருட்டி காவல் நிலையத்தில் தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அதிமுக பிரமுகா் மகள் கொலை வழக்கில் திருப்பம்: நகைக்காக கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்
தந்தையின் இறப்பில் சந்தேகம் எனப் புகாா்
முதியவா் உயிரிழப்பில் சந்தேகம் எனப் புகாா்!
கல்லூரி மாணவா் இறப்பில் சந்தேகம் என புகாா்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

