Listen to this article
By Syndication
Syndication
கடலூா் மாவட்டம் மங்களூரில் டிச.13 -இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து
வரும் டிச.13 சனிக்கிழமையன்று மங்களுா் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளன.
இம்முகாமில் கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நா்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநா்கள் தமிழ்நாடு தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். முகாம் தொடா்பான கூடுதல்
விவரங்களை அறிய எண்.8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், நியூ சினிமா தியேட்டா் எதிரில் செயல்படும் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142-290039), 9499055907, 9499055908 வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

டிச. 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஈரோட்டில் டிசம்பா் 6-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நவ. 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்


"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

கொள்ளுத் துவையல்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
