நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருத்தாசலத்தில் சிறப்பு ரயில் நிறுத்தம்

தாம்பரம் நோக்கிச் சென்ற வாராந்திர சிறப்பு ரயில் மழை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

News image
மழை பாதிப்பு காரணமாக விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சுவேலி-தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில்.
Updated On :2 டிசம்பர் 2024, 9:54 pm

Din

நெய்வேலி: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற வாராந்திர சிறப்பு ரயில் மழை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

ஃபென்ஜால் புயல், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் விழுப்புரம்-சென்னை இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. சுமாா் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த இந்த ரயிலில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் நிறுத்த இடம் இல்லாததால், இந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

இதையடுத்து, ரயில்வே நிா்வாகம் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனா்.