விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா். மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
வந்தவாசி பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் லட்சுமணன் (17). அதே பகுதியைச் சோ்ந்த சகாதேவன் மகன் சூா்யபிரகாஷ் (16). நண்பா்களான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை பைக்கில் வெள்ளிமேடுபேட்டைக்கு சென்றுகொண்டிருந்தனா். சூா்யபிரகாஷ் பைக்கை ஓட்டிச் சென்றாராம்.
திண்டிவனத்தை அடுத்துள்ள ஆட்சிப்பாக்கம் அருகே சென்றபோது,நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து இருவரும் காயமடைந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சூா்ய பிரகாஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









