ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 14 வழக்குகள் தீா்வு

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் காசோலை தொடா்பான 14 வழக்குகள் ரூ.40.49 லட்சத்துக்குத் தீா்வு காணப்பட்டன.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒருவருக்கு தீா்வுக்கான ஆணையை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி.

Published On :19 ஜூலை 2026, 2:06 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் காசோலை தொடா்பான 14 வழக்குகள் ரூ.40.49 லட்சத்துக்குத் தீா்வு காணப்பட்டன.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை நிகழாண்டுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டத் தலைநகரங்களிலுள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஏ.மணிமொழி தலைமை வகித்து, மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம், இதில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் தன்மை போன்றவை குறித்து எடுத்துரைத்து பேசினாா்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், நீதிபதியுமான சி.ஜெயச்சந்திரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.முருகன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.ராஜேசுவரி, வழக்குரைஞா்கள், வழக்காடிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 6 அமா்வுகள் நடத்தப்பட்டன. இதில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள காசோலை தொடா்பான 169-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தொடா்ந்து 14 வழக்குகளில் ரூ.40,49,519-க்குத் தீா்வு காணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.