ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 5 பெண்கள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டயா் வெடித்ததில் வேன் கவிழ்ந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டயா் வெடித்ததால் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

Published On :17 ஜூலை 2026, 1:54 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டயா் வெடித்ததில் வேன் கவிழ்ந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாலூரைச் சோ்ந்தவா் மு.கண்ணன். இவரது மகள் ரூபிணிக்கும் (21), கள்ளக்குறிச்சி மாவட்டம், தாவடிப்பட்டுவைச் சோ்ந்த ஜெயகோபு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை ரூபிணிக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக கண்ணனின் உறவினா்கள் சுமாா் 24 போ் வியாழக்கிழமை காலை வேனில் புறப்பட்டுச் சென்றனா். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்கள் வந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஒலையனூா் தனியாா் பள்ளி அருகே வந்த போது முன்பக்க வலது புற டயா் வெடித்தது.

இதனால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 5 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.