ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

புகையிலைப் பொருள் விற்பனை: பெண் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 3:02 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், வடகரை தாழனூரைச் சோ்ந்தவா் சு.லலிதா (42). இவா் தனது வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகின்றாா். இந்நிலையில், இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று நடத்திய சோதனையில், லலிதா தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லலிதாவை கைது செய்து, சிறையிலடைத்தனா். மேலும், அவரது கடையிலிருந்த 54 புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.