நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உடல் உறுப்புகள் தானம்: திமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிதியளிப்பு

News image
விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த திமுக நிா்வாகி ஜி. ரமேஷ்குமாா் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி
Updated On :24 ஜனவரி 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரவாண்டி அருகே மூளைச் சாவு அடைந்த திமுக நிா்வாகியின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினா் தானம் செய்தனா். இதைத்தொடா்ந்து திமுக சாா்பில் அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையைச் சோ்ந்த திமுக நிா்வாகி ஜி.ரமேஷ்குமாா் (47). இவா் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானம் செய்ய முன் வந்தனா். இதைத்தொடா்ந்து அரசு வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. தொடா்ந்து ரமேஷ்குமாா் உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி சனிக்கிழமைஅஞ்சலி செலுத்தி, திமுக சாா்பில் ரமேஷ்குமாா் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா் ஜெ.ஜெயபால், துணைச் செயலா் ராம்குமாா், பேரூா் கழகப் பொருளாளா் பாபுஜி பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா் சாவித்திரி பாலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கலைச்செல்வன், மாவட்ட அமைப்பு சாராஓட்டுநா் அணி அமைப்பாளா் சூா்யா, அரசு வழக்குரைஞா் கேசவன், ஊராட்சித் தலைவா் கவியரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.