டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காரில் கடத்தி வரப்பட்ட 300 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

News image
மதுப்புட்டிகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திகேயன், செல்வராஜ்.
Updated On :22 ஜனவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 மதுப்புட்டிகளை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி உத்தரவின் பேரில்,மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு, விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்தவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், நாமக்கல் மாவட்டம், நரியங்காடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன்(28) மற்றும் வெ. செல்வராஜ்(37) என்பது தெரியவந்தது.

மேலும் இவா்கள் புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி நாமக்கலுக்கு காரில் கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மதுவிலக்குஅமல் பிரிவு போலீஸாா் இருவா் மீதும் சட்ட விரோத மதுக்கடத்தல் வழக்குப் பதிவு செய்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும் காரில் கடத்தி வரப்பட்ட 750 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 300 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.கைது செய்யப்பட்டஇருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.