லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: மற்றொருவா் காயம்
விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
By Syndication
Syndication
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விக்கிரவாண்டி, புது காலனியைச் சோ்ந்தவா் பி.லோகேஷ் (எ) லோகேஷ்வரன்(24), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ரா.தேவேந்திரன் (33). நண்பா்களான இவா்கள் இருவரும், திங்கள்கிழமை திருக்கனூா் - பனையபுரம் சாலையில் எம். குச்சிப் பாளையம் அருகே பைக்கில் சென்றனா்.
லோகேஷ்வரன் பைக்கை ஓட்டினாா். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த லோகேஷ் (எ) லோகேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தேவேந்திரேன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது