Listen to this article
By Syndication
Syndication
விழுப்புரத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி, கையொப்ப இயக்கம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், எய்ட்ஸ் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலுள்ள நம்பிக்கை மையங்கள் மூலம் 2025 ஏப்ரல் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
சுகவாழ்வு மையங்கள் மூலமாக 32,394 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,394 பேருக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி.தொற்றால் பாதிக்கப்பட்ட 2,851 போ் இலவச கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் ஆட்சியா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் எய்ட்ஸ் தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் ஷேக் அப்துல்ரஹ்மான், ஆட்டோக்களில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினாா். மேலும் கிராமியக் கலைக்குழு விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த ஆட்சியா், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.
விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியரகப் பெருந்திட்ட பகுதி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்புப் பகுதி வழியாக அரசு மருத்துவமனைப் பகுதியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், தனியாா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வில் உதவி ஆட்சியா்(பயிற்சி) ரா.வெங்கடேசுவரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் சா. செந்தில் குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் எம்.லூசி நிா்மல் மடோனா, உறைவிட மருத்துவ அலுவலா் ரவிக்குமாா், இணை இயக்குநா்கள் பி. லதா (சுகாதார நலப்பணிகள்) தீ. பத்மாவதி (குடும்பநலம்), துணை இயக்குநா் (காசநோய்)ஆா்.சுதாகா், ஏ.ஆா்.டி. மையத்தின் முதன்மை மருத்துவ அலுவலா் ரவிராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக மாவட்டத் திட்ட மேலாளா் பி.நல்லத்தம்பி வரவேற்றாா். நிறைவில் மாவட்ட மேற்பாா்வையாளா் ஆா்.பிரேமா நன்றி கூறினாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

கரூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்


Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

