பேருந்து,சாலை வசதி வேண்டி தவெக-வினா் ஆட்சியரிடம் மனு
பேருந்து மற்றும் சாலை வசதி வேண்டி தமிழக வெற்றிக்கழகத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தனா்.
பேருந்து மற்றும் சாலை வசதி வேண்டி தமிழக வெற்றிக்கழகத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தனா்.
By Syndication
Syndication
விழுப்புரம்: பேருந்து மற்றும் சாலை வசதி வேண்டி தமிழக வெற்றிக்கழகத்தினா் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து,தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியச்செயலா் எஸ். ராமச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் கட்சியினா் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விழுப்புரம், திருக்கனூா் வழியாக புதுச்சேரிக்கும், விக்கிரவாண்டி, கோலியனூா் வழியாக புதுச்சேரிக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இப்பேருந்துகள் நிறுத்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 2 வழித்தடப் பேருந்துகளையும் மீண்டும் இயக்குவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
வழக்குரைஞா் சம்பத், தவெக-வைச் சோ்ந்த நவின்ராஜ் காா்த்தி, சம்பத்குமாா்,சௌந்தா், அருண்பிரசாத், விவின் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் மனு அளித்தபோது உடனிருந்தனா்.
இதேபோல், தவெக காணை தெற்கு ஒன்றியச்செயலா் ஜான் பீட்டா் மற்றும் கட்சியினா் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது : விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு அடுத்த ஒட்டன் காடுவெட்டி கிராமத்தில் உள்ள சாலை கடந்த 30 ஆண்டுகளாக்கு மேலாக மண் சாலையாகவே இருந்து வருவதால், மழைக்காலங்களில் சாலை தேரும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஒட்டன்காடிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச்சோ்ந்த பயன்பாட்டில் உள்ள இச்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.தவெக நிா்வாகிக, கிராம மக்கள் உடனிருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது