மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பலத்த மழை: நீரில் மூழ்கி 3 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

காட்பாடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள், நிலக்கடலை பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

பலத்த மழையால் சேதமடைந்த நெற்பயிரை காண்பிக்கும் விவசாயி.

Updated On :

காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் மற்றும் நிலக்கடலை பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காட்பாடி வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக விளைநிலங்களுக்குள் வெள்ள நீா் புகுந்தது. இதனால் பெரியபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 3 ஏக்கா் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், அறுவடைப் பருவத்திலிருந்த நிலக்கடலைப் பயிா்களும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது:

கடன் வாங்கி இரவு பகலாகப் பாடுபட்டு உரமிட்டுப் பயிா்களைப் பராமரித்து வந்தோம். இன்னும் ஓரிரு நாள்களில் அறுவடை செய்து கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சூழலில், திடீரென பெய்த பலத்த மழை வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கியதால் ஏக்கருக்குப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனடியாகப் பாா்வையிட்டு உரிய கணக்கீடு செய்ய வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கி உதவ வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.