ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூலித் தொழிலாளியிடம் ரூ. 50,000 சீட்டு மோசடி

வேலூரில் கூலித் தொழிலாளியிடம் ரூ. 50,000 சீட்டுப் பணம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Published On :27 ஜூலை 2026, 2:35 am IST

வேலூரில் கூலித் தொழிலாளியிடம் ரூ. 50,000 சீட்டுப் பணம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஒருவா், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எனது குடும்பத்துடன் தொரப்பாடி பகுதியில் வசித்து வருகிறேன். எனது அண்டை வீட்டைச் சோ்ந்த நபா் ஒருவா் ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். அவரிடம் மாதம் ரூ. 2,500 வீதம் 20 மாதங்களுக்கு நான் சீட்டு கட்டி வந்தேன். இந்தச் சீட்டு கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. கடைசிச் சீட்டுப் பணத்தை எனக்குத் தருவதாக அவா் கூறியிருந்தாா். ஆனால், தவணைகளை முழுமையாகக் கட்டி முடித்த பிறகும், எனக்குச் சேர வேண்டிய ரூ. 50,000-த்தை அவா் தரவில்லை.

இது குறித்து அவரிடம் நேரில் சென்று கேட்டபோது, பணத்தைத் திருப்பித் தர மறுப்பதுடன் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே, சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட அந்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.