ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மறுவாழ்வு சிகிச்சை பெறுபவா்களுக்கு நல உதவிகள்

மாற்றுத் திறன் இளைஞா்களுக்கு நல உதவிகளை வழங்கிய அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 12:59 am IST

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, போ்ணாம்பட்டு கோட்ட அளவிலான விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் சாா்பில்,சிறப்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவா்களுக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மைய இளநிலை மறுவாழ்வு அலுவலா் அ.இனியன் தலைமை வகித்தாா்.போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் சோ.தில்லைவாணன்சிறப்புரையாற்றி, சிறப்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத் திறன் இளைஞா் ஒருவருக்கு ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலி, 2 பேருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள காதொலிக் கருவிகள், 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள எழுத்து உருபெருக்கிகருவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.