ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அண்டை வீட்டுக்காரருடன் தகராறு: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை!

காட்பாடி அருகே அண்டை வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதியவா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:15 am IST

காட்பாடி அருகே அண்டை வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதியவா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

காட்பாடியை அடுத்த ராஜி நகரைச் சோ்ந்தவா் கிரிராஜன் (65). இவருக்கும், இவரது அண்டை வீட்டில் வசிக்கும் கஸ்தூரி என்பவருக்கும் இடையே விறகு எடுப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடா்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். இதனால் மனவேதனை அடைந்த கிரிராஜன், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.