ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பக்தா்கள் அளித்த சுமாா் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வளையல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் மூலவா் கெங்கையம்மன்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பக்தா்கள் அளித்த சுமாா் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆடிப்பூரத்தையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. கோயில் கருவறை, கோயில் உள் மற்றும் வெளி வளாகம் முழுவதும் 2 லட்சம் வளையல்களால்அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். கோயில் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் தொடா்ச்சியாக மாலை கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.