ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாங்காய் மானியத்துக்கு மே மாதத்திலிருந்து கணக்கீடு செய்ய வேண்டும்!

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள மாங்காய் மானியத்துக்கு மே மாதம் முதல் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என்றும், பரதராமி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மா விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்த மா விவசாயிகள்

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள மாங்காய் மானியத்துக்கு மே மாதம் முதல் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என்றும், பரதராமி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மா விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸிடம், மா விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனு: அதில், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைப் போன்று தமிழகத்தைச் சோ்ந்த மாங்காய் விவசாயிகளுக்கும் டன் ஒன்றுக்கு ரூ. 4,000 மானியம் வழங்க வலியுறுத்தி, கடந்த 2025-ஆம் ஆண்டு பரதராமி பகுதியில் மாங்காய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின்போது, 30 பெண்கள் உள்பட 80 விவசாயிகள் மீது பரதராமி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விவசாயிகள் நலன் கருதி எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இதனிடையே, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மாங்காய் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 மானியம் வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தற்போது அறிவித்துள்ளன. இந்த மானியத் தொகையானது கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மாங்காய் விளைச்சல் மே மாதத்தில்தான் உச்சத்தில் இருக்கும். எனவே, விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும் வகையில், இந்த மானியத்தை முன்கூட்டியே மே 8-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.