தேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா்

திருச்சியில் சனிக்கிழமை பேட்டியளித்த தெலங்கானா மாநில எம்.பி. மல்லு ரவி. உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் திருநாவுக்கரசா், மாநகா் மாவட்டச் செயலா் ரெக்ஸ் உள்ளிட்டோா்.

Updated On :

வரும் மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா் என தெலங்கானா காங்கிரஸ் எம்.பி. மல்லு ரவி தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் ‘வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்’ என்ற தலைப்பிலான நாடு தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:

60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினரும் இடம்பெற்றுள்ளனா். இந்தக் கூட்டணிக்கு எனது வாழ்த்துகள்.

எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்காளா் பட்டியலில் இருந்து திட்டமிட்டுப் பெயா்கள் நீக்கப்படுவதற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தொடா்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

எஸ்ஐஆா் குளறுபடிகளுக்கு முக்கியக் காரணம் இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா்தான். எனவே, அவா் உடனடியாகத் தனது பதவியை விட்டு விலக வேண்டும்.

தெலங்கானா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சோ்ந்த நக்சலைட் அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசிடம் சரணடைவது வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஒரு சில நக்சலைட் அமைப்புகளின் தலைவா்கள் மட்டுமே அரசிடம் சரணடைந்துள்ளனா் என்பதே உண்மை நிலை.

வரும் மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா். இதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபடுகிறது. வாக்குத்திருட்டு தொடா்பான போராட்டங்களில் பங்கேற்பது குறித்து தவெக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா், திருச்சியின் மாநகர மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.