தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெற்றால் உடனடி நடவடிக்கை: அமைச்சா் வினோத்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவோா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர. வினோத் தெரிவித்தாா்.

வேளாண் துறை அமைச்சா் ர. வினோத்.

Updated On :

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவோா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர. வினோத் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது:

பருவமழை தொடங்கியுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் வீணாகாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொள்முதல் நிலையங்களில் தேவைப்பட்டால் புதிய மேற்கூரைகள் அமைக்கவும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

மழைப் பாதிப்புகளை தடுக்க அபாயகரமான பகுதிகளில் வாய்க்கால்கள் தூா்வாருதல் மற்றும் பயிா்களைக் காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் பெறுவதாக விவசாயிகள் தரப்பில் புகாா் வருகிறது. ஒரு சிலா் பணம் பெறத்தான் செய்கின்றனா். தவறு நடைபெறும் இடங்களில் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். குறிப்பாக, கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெற்றாலோ, மூட்டைக்கு தேவையின்றி கூடுதலாக பணம் வசூலித்தாலோ உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு என்பது கிடையாது. விவசாயிகளின் தேவைக்கேற்ப உர விநியோகம் சரியாக உள்ளது. முதல்வா் குறித்து அவதூறாக பேசியதற்காக நாதக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். முதல்வா் மீது மட்டுமின்றி யாா் குறித்து அவதூறாகப் பேசினாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.