40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தேநீா் தயாரிப்பின்போது ஆடையில் தீப்பற்றி ஆண் உயிரிழப்பு

திருச்சியில் தேநீா் தயாரிக்கும்போது ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:04 am IST

திருச்சியில் தேநீா் தயாரிக்கும்போது ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா் டிடி சாலையைச் சோ்ந்தவா் அ. பஷீா் அகமது (40). இவா், புதன்கிழமை அதிகாலையில் 4 மணிக்கு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்வதற்காக எழுந்துள்ளாா். குளித்துவிட்டு வந்து தேநீா் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்துள்ளாா். அப்போது, திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது.

பஷீா் அகமதுவின் அலறல் கேட்டு வந்த அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிக்சை பலனின்றி மாலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.