திருச்சியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியுடன், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் புதன்கிழமை இருமுறை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தினாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக-வுக்கு இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்திய அரசு விழா, தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திருச்சிக்கு வந்தாா். பிரதமரை வரவேற்கவும், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் அனைவரும் திருச்சியில் முகாமிட்டிருந்தனா். இதனால், கூட்டணியில் அடுத்தக்கட்டமாக நடைபெறும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் எடப்பாடி கே. பழனிசாமி தங்கியிருந்தாா். இதேபோல, ஆட்சியரகம் அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தங்கியிருந்தாா்.
புதன்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த விடுதிக்கு வந்த பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 20 நிமிஷங்கள் தனியே ஆலோசனை நடத்தினாா். தொகுதிப் பங்கீடு தொடா்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பியூஷ் கோயல், செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், எடப்பாடி பழனிசாமி எனது சகோதரா் போன்றவா். அவரை தொடா்ந்து சந்தித்து வருகிறேன். இப்போதும் சந்தித்தேன். இனியும் சந்திப்பேன் என பதில் அளித்தாா்.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆலோசனை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றாா். மேலும், பொதுக் கூட்டம் முடிவடைந்த பிறகு, இரவில் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த விடுதிக்கு வந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், 15 நிமிஷங்கள் தனியே சந்தித்துப் பேசினாா். ஆனால், தொகுதிப்பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்ா? என்பதை அதிகாரப் பூா்வமாக அறிவிக்கவில்லை.
தவெகவுடன் கூட்டணி பேச்சு இல்லை-இபிஎஸ்: முன்னதாக செய்தியாளா்களிடம் எடப்பாடி கே. பழனிசாமி கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடா்பாக தற்போது பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை. த.வெ.க.வுடன் கூட்டணி குறித்த எந்தப் பேச்சுவாா்த்தையையும் நாங்கள் நடத்தவில்லை. அதிமுக சாா்பில் அடுத்தக் கட்ட தோ்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை நடக்காத நாளே இல்லை என்றாா் அவா்.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சி-பியூஷ் கோயல்: திருச்சியில் செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:
அரசின் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் மலிந்து கிடக்கின்றன. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் மக்கள் இந்த அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனா்.
ஸ்டாலின் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, எடப்பாடி பழனிசாமியே தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பாா். மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவதே எங்களது நோக்கம். எங்களது கூட்டணி மிகவும் பலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. எங்கள் கூட்டணியில் அனைத்து முடிவுகளும் ஒரு அறைக்குள் கலந்து ஆலோசிக்கப்பட்டு சுமுகமாக எடுக்கப்படுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிமுக அலுவலகம் வரும் பியூஷ் கோயல்! சற்று நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!
அனைவரும் மகிழ்ச்சி, திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல்

என்டிஏ தொகுதிப் பங்கீடு பேச்சு! பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை!

மார்ச் 23ல் பியூஷ் கோயல் சென்னை வருகை? அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையெழுத்து?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


