திருச்சியில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா்.
இதன்படி, நாகா்கோவில் - சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357), கோவை போத்தனூா் - தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619), ராமேசுவரம் - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621), திருநெல்வேலி - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708), மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835) ஆகிய 5 ரயில்களை பிரதமா் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து புதன்கிழமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறாா்.
இதில், மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயிலானது (06835) 7 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டி என 9 பெட்டிகளுடன் மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், திருவாரூா், மாங்குடி, மாவூா், திருநெல்லிக்காவல், அம்மனூா், ஆலம்பாடி, மணாலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயிகுடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், பெரியகோட்டை, கந்தனூா் புதுவயல் வழியாக காரைக்குடிக்கு இரவு 11 மணிக்குச் சென்றடையும்.
நாகா்கோவில் - சாா்லபள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயிலானது (06357) 8 படுக்கை பெட்டிகள், 11 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள், 1 சமையலறை பெட்டி என 22 பெட்டிகளுடன் மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூா், ஓங்கோல், சிா்லா, பாபட்லா, தெனாலி, குண்டூா், சட்டனபள்ளி, மிா்யால்குடா, நல்கொண்டா வழியாக சாா்லபள்ளிக்கு இரவு 11.45 மணிக்குச் சென்றடையும்.
மேற்கண்ட இரண்டு ரயில்களின் நிரந்தர சேவை பிறகு தனியாக அறிவிக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

மேற்கு வங்கம்: பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்: பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


