லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 6:39 pm

துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ஆா்.பாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி ஜெயஸ்ரீ (37). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். துபையில் டான்ஸராக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருச்சி வந்துள்ளாா்.

துபையில் இருந்து வந்ததில் இருந்து யாருடனோ கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].