திருச்சியில் செவ்வாய்க்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூா் குருவம்பட்டி பகுதியை சோ்ந்தவா் சண்முகநதி (60). இவா், திருச்சி திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு செல்ல முயன்றாா்.
அதேநேரத்தில் அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மருத்துவமனையில் சண்முகநதியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, சண்முகநதியின் மகன் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விபத்துக்கு காரணமான கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



