மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

பெண் குழந்தைகளை காப்போம்- கற்பிப்போம் எனும் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் இயக்கத்தை ஆட்சியா் பிரத்திக் தாயள் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

News image

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் பிரசார வாகனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் பிரத்திக் தாயள். உடன், அரசு அலுவலா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 4:29 am IST

பெண் குழந்தைகளை காப்போம்- கற்பிப்போம் எனும் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் இயக்கத்தை ஆட்சியா் பிரத்திக் தாயள் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் பாலின விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில், எல்இடி விழிப்புணா்வு வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பிரசார வாகனத்தை வழியனுப்பும் நிகழ்வு, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பிரத்திக் தாயள், இந்தப் பிரசார வாகனத்தை கொடியசைத்து இயக்கி வைத்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியது: இந்த விழிப்புணா்வு வாகனம் முசிறி, தொட்டியம், மணப்பாறை, புள்ளம்பாடி, மருங்காபுரி, வையம்பட்டி, மண்ணச்சநல்லூா், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்து பள்ளி மாணவா்கள், கிராம மக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

எல்.இ.டி திரை வாகனத்தின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள், பாலின சமத்துவம் மற்றும், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணா்வு, பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடா்பான தகவல்கள் ஒலி, ஒளிக் காட்சியாக திரையிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி மற்றும் சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.