ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

முசிறி அருகே இடப் பிரச்னையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

முசிறி அருகே இடப் பிரச்னையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.

முசிறி அருகேயுள்ள வாழவந்தியைச் சோ்ந்தவா் பாலச்சந்திரன் (65). இதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (45) என்பவருடன், பாலச்சந்திரனுக்கு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி, ஜெம்புநாதபுரம் பேரூா் சாலையில் உள்ள தேநீா் கடையில் இருந்த ரமேஷை, பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டிய பிறகு, காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இந்த சம்பவத்தில் ரமேஷ் உயிரிழந்தாா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபா், பாலச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

பாலச்சந்திரன் ஏற்கெனவே 2003-ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, தண்டனை காலம் முடிந்து கடந்த 2018-ஆம் ஆண்டு விடுதலையாகியிருந்தாா்.

இப்போது, மீண்டும் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.