ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்: அதிகாரிகள் விசாரணை

திருச்சி காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த மீன்களை செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்திய மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

திருச்சி காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

மேட்டூா் அணை திறக்கப்படாததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது. குடிநீா் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது நீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீா் ஆங்காங்கே குளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில், கம்பரசம்பேட்டை தடுப்பணைக்கும், அம்மா மண்டபம் படித்துறைக்கும் இடையே தேங்கியிருந்த காவிரி நீரில் செவ்வாய்க்கிழமை திடீரென லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.

தொடா்ந்து, அப்பகுதியில் இறந்த மீன்களால் தூா்நாற்றம் வீசத் தொடங்கியதால், கீதாபுரம் பகுதி மக்கள் திருச்சி மாநகராட்சியிடம் புகாரளித்தனா். இதன்பேரில் அங்கு வந்த மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள், இறந்து கிடந்த மீன்களை அப்புறப்படுத்தி, கரையில் புதைத்து, துா்நாற்றம் ஏற்படாமல் இருக்க அதன் மேல் பிளீச்சிங் பவுடரை தூவினா்.

மீன்களின் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.