ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விவசாயிகள் சங்க தலைவா் அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் பி. அய்யாக்கண்ணுவிடம் திங்கள்கிழமை பேச்சு நடத்திய போலீஸாா்.

Published On :28 ஜூலை 2026, 12:55 am IST

சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராடுவதாக அறிவித்திருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவா் பி. அய்யாக்கண்ணுவை போலீஸாா் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக் காவலில் சிறை வைத்தனா்.

தமிழக விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், கா்நாடக மாநில அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை கண்டித்தும், காவிரி ஆற்றில் தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறந்து விடாததை கண்டித்தும், உச்சநீதிமன்றமும் காவிரி நடுவா் மன்றமும் உத்தரவிட்ட பின்பும் உத்தரவை செயல்படுத்தாத கா்நாடக அரசை கண்டித்தும், சென்னை தலைமைச் செயலகம் சென்று போராட்டம் நடத்த உள்ளதாக பி. அய்யாக்கண்ணு அறிவித்திருந்தாா்.

இதையறிந்த திருச்சி போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி அண்ணாமலை நகா், மலா் சாலையில் உள்ள அய்யாக்கண்ணுவின் வீட்டுக்குச் சென்று, அவரை வீட்டுக்காவலில் சிறை வைத்தனா்.

விடுவிப்பு: தொடா்ந்து திங்கள்கிழமை முற்பகலில் காவல்துறை உயரதிகாரிகளின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, வீட்டுக்காவலில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்: சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு பி. அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.