ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :28 ஜூலை 2026, 2:58 am IST

திருச்சியில் பயிற்சி வழக்குரைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்தவா் த. ஹரிராமசந்திரன் (27), பயிற்சி வழக்குரைஞா். இவருடைய மனைவி கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு பிரசவத்துக்காக மதுரையில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். குழந்தை பிறந்து ஒன்றரை மாதமாகிறது.

இந்நிலையில், குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து ஹரிராமசந்திரன் மனைவியை அழைக்கச் சென்றுள்ளாா். அப்போது, அவா் ஆடி மாதம் முடிந்து வருவதாகத் தெரிவித்துள்ளாா். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ஹரிராமசந்திரன் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொன்மலை போலீஸாா், அவருடைய சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.