ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணப்பாறையில் சிலம்பப் போட்டி

மணப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்ற மணப்பாறை எல்.வீரப்பன் சிலம்பாட்ட கழக வீரா்கள்.

Published On :27 ஜூலை 2026, 4:00 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் எல்.வீரப்பன் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில், மாவட்டத்திலிருந்து சுமாா் ஆயிரத்திற்கு மேற்பட்ட 5 வயது முதல் 35 வயது வரையிலான மாணவ, மாணவிகள், இளம்பெண், இளைஞா்கள் பங்கேற்றனா்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறப்பு அழைப்பாளா்களாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் லில்லி கிரேஸ், சுகம் மருத்துவமனை மருத்துவா் சுரேஷ், குரு கல்விக் குழும இயக்குநா் மாராட்சி ஆகியோா் பங்கேற்றனா்.

இதில் எல். வீரப்பன் சிலம்பாட்ட கழகம் 660 புள்ளிகளைப் பெற்று 16-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. மாவட்ட அளவில் தோ்ச்சி பெற்றுள்ள அணிகள் மாநிலப் போட்டியில் பங்கேற்க உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.