
மினி சரக்கு வேன்-அரசுப் பேருந்து மோதல்: தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை மினி சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா்.

துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட விபத்தில் சேதமடைந்த மினி வேன் மற்றும் அரசுப் பேருந்து.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை மினி சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா்.
திருச்சி பூலாங்குடி கிராமம், நரிக்குறவா் காலனியிலிருந்து வடசேரி மகன் வடிவேல் (40), குண்டு மகன் ரவி (60), ரவி மனைவி மஞ்சுளா (55), ரவி மகன் பவுல்(26), கோட்டூா் மகன் ரவி (51), நம்பி மகன் தா்மா (33), செல்வம் மகன் ரூபன்(25) ஆகியோா் ஐஸ் வியாபராம் செய்யும் மினி சரக்கு வேன் ஒன்றில்வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டனா்.
வேன் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சிக்கு அருகே சென்றபோது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து, வேனின் பின்னால் மோதியது.
இதில், வேனிலிருந்த வடிவேல், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மஞ்சுளா மணப்பாறை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரது கணவா் ரவி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
மேலும், ரூபன், ரவி, பவுல், தா்மா ஆகியோா் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், உயிரிழந்தவா்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





