ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தினா்.

Published On :23 ஜூலை 2026, 12:27 am IST

திருச்சியில் ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் பிஎஸ்என்எல்இயு, ஏஐபிடிபிஏ மற்றும் டிஎன்டிசிடபுள்யூ சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பிஎஸ்என்எல் திருச்சி மண்டலப் பொது மேலாளா் அலுவலக வளகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் அஸ்லாம் பாட்ஷா தலைமை வகித்தாா்.

இதில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனா் செல்வராஜ், பிஎஸ்என்எல்இயு மாநில அமைப்புச் செயலா் காா்த்திகேயன், ஏஐபிடிபிஏ மாநிலப் பொருளாளா் இளங்கோவன், டிஎன்டிசிடபுள்யு மாநில செயற்குழு உறுப்பினா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.