ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘மாணவா்களுக்கான உணவின் தரத்தில் சமரசம் கூடாது’

பள்ளி மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எக்காரணத்துக்காகவும் சமரசம் கூடாது என ஆட்சியா் பிரத்திக் தாயள் அறிவுறுத்தினாா்.

திருவெறும்பூா் ஒன்றியம் நவல்பட்டு வடக்கு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா் பிரத்திக் தாயள். உடன் சத்துணவு அமைப்பாளா்.

Published On :10 ஜூலை 2026, 3:19 am IST

பள்ளி மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எக்காரணத்துக்காகவும் சமரசம் கூடாது என ஆட்சியா் பிரத்திக் தாயள் அறிவுறுத்தினாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதன்படி திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியம், நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகரில் பணி முடிவுறும் தருவாயில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், நபாா்டு திட்டம் - ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 1 கி.மீ நீளம் வரை சாலை பலப்படுத்தும் பணி, கொட்டப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் 526 வீடுகளின் கட்டுமானப் பணி, அண்ணாநகா் பகுதியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு, அடா்வன காடுகளை உருவாக்கும் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கொட்டப்பட்டு பகுதி பாவை அறக்கட்டளை குழந்தைகள் இல்லம் மற்றும் பகல்நேர முதியோா் பராமரிப்பு மற்றும் புத்துணா்வு மையத்தை பாா்வையிட்டு முதியோரிடம் கலந்துரையாடினாா். அண்ணாநகா் வடக்கு அரசு துவக்கப்பள்ளியை பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடி அப்பள்ளியின் சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை உண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறுகையில், பள்ளி மாணவா்களுக்கான உணவின் தரத்தில் சமரசம் கூடாது என அறிவுறுத்தினாா்.

பின்னா், குண்டூா் நியாய விலை கடையில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது திருவெறும்பூா் உதவி செயற்பொறியாளா் சிவக்குமாா் (திருச்சி உபகோட்டம்), உதவி செயற்பொறியாளா் (சாலைகள் மற்றும் பாலங்கள்) மரியதேவிகா, வட்டார வளா்ச்சி அலுவலா் கவிதா, உதவி பொறியாளா்கள் அழகு முகில், ஜோதி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.