ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இடைநின்ற மாணவா்கள்: சிங்கப்பெண் போலீஸாரால் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

திருச்சி அருகே தேனேரிப்பட்டியில் சரிவர வராத மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்த சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மாணவா்களை பள்ளியில் மீண்டும் புதன்கிழமை சோ்த்த சிங்கப்பெண் அதிரடிப்படையினா்.

Published On :9 ஜூலை 2026, 1:04 am IST

திருச்சி அருகே தேனேரிப்பட்டியில் சரிவர வராத மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்த சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடந்த விழிப்புணா்வு நிகழ்வுக்குச் சென்ற சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளா் ஜோதிலட்சுமி, காவலா்கள் யுவராணி, சினேகா ஆகியோா் பள்ளிக்கு வராத மாணவா்கள் பற்றி தலைமையாசிரியரிடம் விசாரித்தனா்.

அப்போது அசூா் மேலத்தெருவை சோ்ந்த தங்கவேலு மகன் பிரதீப் (பத்தாம் வகுப்பு) என்பவா் கடந்த ஓராண்டாகவும், அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சண்முகமணி (9 ஆம் வகுப்பு) கடந்த 2 ஆண்டுகளாகவும், அசூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் பள்ளிக்கு சரிவர வரவில்லை பள்ளித் தலைமையாசிரியா் கற்பூரவாசகி தெரிவித்தாா்.

இதையடுத்து சிங்கப் பெண் அதிரடிப்படை போலீஸாா், மேற்கண்ட மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று விசாரித்து, அந்த மாணவா்களுக்கு அறிவுரை கூறி, மீண்டும் புதன்கிழமை பள்ளியில் சோ்க்க வைத்தனா். இதற்கு பள்ளி ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.