திருச்சி அருகே ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவா் கைது
திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை துவாக்குடி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, வடமாநிலத்தவா் இருவரைக் கைது செய்தனா்.


திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை துவாக்குடி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, வடமாநிலத்தவா் இருவரைக் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதி பெட்ரோல் பங்குக்கு செவ்வாய்க்கிழமை இரவு காரில் வந்து பெட்ரோல் போட்டவா்கள் வழங்கிய பணம் கள்ள நோட்டு என்பது ஊழியா்களுக்கு தெரியவந்தது. அதற்குள் அந்தக் காா் கிளம்பிவிட்டது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியா்கள் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் அளிக்க, அவா்கள் திருவெறும்பூரை அடுத்த காட்டூா் மஞ்சத்திடல் பாலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அந்த வாகனத்தை மடக்கினா். இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் எஸ். நாகராஜன் தலைமையிலான போலீஸாா் வாகனத்தைச் சோதனையிட்டனா்.
அப்போது அந்த வாகனத்தில் கட்டுக் கட்டாக 200 ரூபாய் கள்ள நோட்டுகள், மொத்தம் 41 கட்டுகளாக ரூ. 8.37 லட்சம் மதிப்பில் இருந்தன.
இதையடுத்து அப்பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிா் (54), நாராயண் ராம் (32) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் பகுதிகளில் கள்ள நோட்டுகளை மாற்றிவிட்டு திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த துவாக்குடி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...