தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:47 pm

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் அய்யப்பன் நகரைச் சோ்ந்தவா் பொ. சண்முகசுந்தரம் (52), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டாமல் வெளியே சென்றுள்ளாா். பின்னா், அன்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.