
ஸ்ரீரங்கம் ஸ்ரீவரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் மகா சம்ப்ரோகக்ஷணம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோகக்ஷணம்.
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் மகா சம்ப்ரோகக்ஷணம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
முன்னதாக, கடந்த 17-ஆம் தேதி மாலை மங்களஹாரத்தியுடன் முதல்கால பூஜையுடன் விழா தொடங்கியது.
தொடா்ந்து 18-ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது. விழாவில் மகா சம்ப்ரோகக்ஷணம் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு விஸ்வரூபம் தரிசனம் மற்றும் கோ பூஜையை தொடா்ந்து 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது.
அதன் பின்னா் யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, ஸ்ரீ வரசித்தி ஆஞ்சனேயா் சுவாமி கோயில் விமானத்துக்கு மங்களவாத்தியத்துடன் எடுத்து செல்லப்பட்டு, காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் புனித நீா் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. இதை ஸ்ரீரங்கம் கோயில் மிராசு அா்ச்சகா் நரசிம்ம பட்டா், மகாதேவன், மதுசூதனன் ஆகியோா் செய்தனா்.
அப்போது, திராளான பக்தா்கள் பக்தி கோஷங்களுடன் வழிபட்டனா்.
பின்னா் சாற்று முறையும், மஹா நைவேத்யமும், மங்களஹாரத்தியும் நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் அக்டோபா் 6-ஆம் தேதி வரை நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






